» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி

வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:16:26 AM (IST)



பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் "தொழில் வாய்ப்புகள் மற்றும் அறிவியலையும் சந்தையையும் இணைத்தல்" என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடந்தது.

கல்லூரி கலையரங்கத்தில் வைத்து தேனீ, கோழி, மீன் வளர்ப்பு ஆகிய தலைப்புகளில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சியின் முதல் நாள் கல்லூரி முதல்வர் அப்துல்காதர் தலைமை வகித்து உரையாற்றினார். துணை முதல்வர் ஜேனட் ராணி, விலங்கியல் துறைத் தலைவர் சித்தி ஜமீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆய்வுபுல முதன்மையர் ஜாகிர் உசேன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் சாமிநாதன் தேனீக்களின் வகைகள், அதனை வளர்த்தல் பராமரித்தல், நோய் தடுப்பு குறித்தும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் முயற்சியாக தேனி வளர்ப்பை தேர்ந்தெடுக்கலாம் என வலியுறுத்தி பேசினார். 

இரண்டாம் நாள் நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எட்வின் கோழி வளர்ப்பு குறித்து கலந்துரையாடினார். தொழிற் திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை எளிய நடையில் விளக்கினார். மூன்றாவது நாள் தூத்துக்குடி மீன்வளப் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் ஆதித்தன் நன்னீர் மீன் வளர்ப்பு குறித்தும், அதன் தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் 150 மாணவர்கள் நேரடியாகவும் இணைய வழியாகவும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இப்பயிற்சியில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிறைவாக முதுநிலை விலங்கியல் துறை பேராசிரியர் முத்துராமன் நன்றி கூறினார்.  பயிற்சிக்கான ஏற்பாடுகளை விலங்கியல் துறைப் பேராசிரியர்கள் முஹம்மது ரம்லத் சபுரா, பீர் முகமது, தாவரவியல் துறைத் தலைவர் சையது அலி பாத்திமா, முதுநிலை விலங்கியல் துறைத் தலைவர் டிலைட்டா மனோ ஜாய்ஸ், பேராசிரியர்கள் ஷீபா வான்மதி, முகைதீன் மற்றும் விலங்கியல் துறை மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory