» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!

வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில், தி.மு.க. பெண் சேர்மன் மீது, தி.மு.க.வினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் தோல்வியடைந்தது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய செயலராக தி.மு.க.வை சேர்ந்த சவுமியா உள்ளார். இவரது கணவர் ஆரோக்கிய எட்வின் கவுன்சிலராக இருப்பதோடு, தி.மு.க. ஒன்றிய செயலராகவும் உள்ளார். இருவரும் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டில், தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், தி.மு.க. - 6, அ.தி.மு.க. - 3, சுயேச்சை - 2, அ.ம.மு.க - 1 என, மொத்தம் 12 பேர் சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. சேரன்மகாதேவி சப் -கலெக்டர் ஆயுஷ் குப்தா, பி.டி.ஓ. யமுனா ஆகியோர் தலைமையில் நடந்த ஓட்டெடுப்பில், 12 பேர் மட்டும் பங்கேற்றனர்.

சேர்மன் சவுமியா, அவரது கணவர் ஆரோக்கிய எட்வின், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருவர் என, நால்வர் பங்கேற்கவில்லை. தி.மு.க.வினர் 6 பேர் எதிராக ஓட்டளிக்க தயாராக இருந்த போதிலும், 5ல் 4 பங்கு அதாவது, 13 பேர் வராததால், ஒரே ஒரு ஓட்டு குறைவால் தீர்மானம் நிறைவேறவில்லை. அ.தி.மு.க.வினர் தயவால், தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory