» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)



திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில்  குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கும், பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் இன்றையதினம் முதல் (27 நவம்பர் 2025 முதல் 8 மார்ச் 2026 வரை) தொடர்ந்து 100 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

தொடக்க நிகழ்ச்சியாக, குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியாக குழந்தை திருமணம் என்பது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு தீய செயலாகும். இது பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை தடுத்து, அவர்களின் கல்வி கனவுகளை நோக்கி செல்வதற்கு தடையாகவும் உள்ளது. எனவே, நான் குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன். 

என் குடும்பம், சுற்றுப்புறம் மற்றும் சமூகத்தில் குழந்தை திருமணம் நடைபெறாதபடி உறுதி செய்வேன். குழந்தை திருமணம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்வதாக தெரியவந்தால் உனடியாக பஞ்சாயத்து மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன். குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்காக நான் என்றும் போராடுவேன். குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தாஜூன்னிசா பேகம், உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory