» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெங்காடம்பட்டியில் இரு பெரும் விழா: 190 வது திருவள்ளுவர் சிலை திறப்பு

திங்கள் 8, டிசம்பர் 2025 3:21:48 PM (IST)



வெங்காடம்பட்டி மூதாளர் பேணலகத்தில் நடைபெற்ற இரு பெரும் விழாவில் வி.ஜி.பியின் 190 வது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டியில் டிரஸ்ட் மூதாளர் பேணலகம் நடைபெற்று வருகிறது. இங்கு வி.ஜி.பியின் 190 வது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. சமூகத்தில் குழந்தைகள் நலனுக்காக வாழ்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் இந்தோ- இத்தாலியன் கௌரவ விருதுகளை இத்தாலி நாட்டவர்கள் வழங்கினர்.
 
நிகழ்ச்சிக்கு ஹரி பிரியாணி அதிபர் ஹரிஹர செல்வன் தலைமை தாங்கினார். முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன் முன்னிலை வகித்தார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் வரவேற்றார். 190 வது திருவள்ளுவர் சிலையை வி.ஜி.பி அதிபர் வி.ஜி சந்தோஷம் திறந்து வைத்து பேசினார். மணிமுத்தாறு காவல்துறை ஒன்பதாவது பட்டாலியன் கமாண்டண்ட் கார்த்திகேயன் கல்வெட்டினை திறந்து வைத்தார். 

இத்தாலி நாட்டு மார்க்கோ கேப்ரா, மாரா இன்னோசன்ஸி, கயினோ பனோன், மனுவேலா ரூசோ, அலெஸாண்ட்ரா குக்லைல்மினி, கலந்து கொண்டு குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர் உயர்வுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விருது பத்திரங்களை வழங்கினர். 

சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி, கடையநல்லூர் அரசு கல்லூரி பேராசிரியர் பால் மகேஷ, வரம் நாகராஜன், ரோட்டரி கணேசமூர்த்தி, பில்டர் இசக்கியப்பன், அமலி பள்ளி அருள் மேரி, மரிய இனிகோ, நெல்லை விநாயகம், பசுமை ஜவகர், பெத்தநாடார்பட்டி வைத்திலிங்கம், விகேபுரம் அருட் சகோதரர் அந்தோணிசாம, பீமு ஆசிரியை, அம்பை மரகத சுப்பிரமணியன், ஆசிரியர் பெத்தநாடார்பட்டி எழுத்தாளர் விஜயராணி, ஆய்க்குடி தலைமையாசிரியை பார்வதி, கவுன்சிலர் ஐசக் தேவநேசன், உலகம் அறிந்த "யோகா” ப்ரிஷா, வள்ளியூர் ஆண்டாள் என 50க்கும் மேற்பட்டோர் கௌரவிக்கப்பட்டனர். 

தென்காசி மாவட்ட குழந்தை நல குழு தலைவி விஜயராணி, காரல் மார்க்ஸ், ஆர். தங்கம், எம்.இஸ்மாயில் கனி, கே.சுரேஷ் மற்றும் தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி எல்.அலெக்ஸ் இண்டோ- இத்தாலி சிறப்பு விருது பெற்றனர்.

பெனிவிட்டி பரமேஸ்வரன், உதயகுமார், நித்யா மற்றும் சென்னை ஆர். ராஜ் பிரதீப் ஆகியோரின் குழந்தை நல சேவைகளை அனைவரும் பாராட்டினர். விழாவில் முதியோர்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாண்டு சேலைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சாந்தி திருமாறன், நன்னன் மற்றும் பிஜேபி பீட்டர் செய்திருந்தனர். வெளிநாட்டவர்க்கு பாரம்பரிய விருந்து வெங்காடம்பட்டி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory