» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புதிய தொழிலாளர் சட்டம் ஊழியர்களுக்கு பலனளிக்கும் : மத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் பேட்டி

புதன் 10, டிசம்பர் 2025 4:54:05 PM (IST)



மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியத்தை மேம்படுத்தும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மத்திய அரசு புதிதாக 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஊதியச்சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்பு சட்டம், பணியிடப் பாதுகாப்பு சட்டம் ஆகிய 4 சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. மாறி வரும் பணிச்சூழல்களை கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அந்த வகையில் மத்திய அரசு கொண்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள், ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பலன்களை நீட்டிப்பதோடு, ஒப்பந்த கால ஊழியர்களுக்கான (Fixed-Term Employees) பணிக்கொடை (Gratuity) பெறுவதற்கான கால வரம்பை 5 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைத்து மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை மூத்த துணை ஆணையர் ஶ்ரீனு தாரா, மதுரை மண்டல ஆணையர் பிரவீன் பாண்டி மோகன்தாஸ் ஆகியோர் தெரிவித்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இச்சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தூத்துக்குடி விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் கூறுகையில். ஊதியச் சட்டம், தொழில்துறை உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றை இந்தச் சட்டங்கள் உறுதி செய்யும்.

ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெறத் முடியும், மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் பெற முடியும், மாதச் சம்பளத்தில் PF பிடித்தம் அதிகரிக்கடும், பெண்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாகப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் பணி நியமனக் கடிதம் கட்டாயம் பெறுதல் போன்றவை அமலுக்கு கொண்டு வருவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று கூறினார். 

கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் அனுப், தொழிலாளர் சட்ட அமலாக்க அலுவலர்கள் சுனில் குமார் கீர்த்தி, எஸ். வி.அருண் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

கே.கணேசன்.Dec 11, 2025 - 11:32:00 AM | Posted IP 162.1*****

சட்டம் தொழிலாளர்களுக்கு பயன்கள் அளிக்கிறது.வரவேற்கிறோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory