» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்!

புதன் 10, டிசம்பர் 2025 5:17:12 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 8 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களின் திறமையை மேம்படுத்தும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற ஏற்பாடு செய்யுமாறு ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன்(ஆயுதப்படை பொறுப்பு) மேற்பார்வையில் மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்வமுள்ள தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 8 பெண் காவலர்களுக்கு 35 நாட்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்தனர்.

மேற்படி ஓட்டுநர் பயிற்சியை சிறப்பாக மேற்கொண்ட 8 பெண் காவல்துறையினர் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஓட்டுனர் உரிமம் பெற்றனர். மேற்படி 8 பெண் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (10.12.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஓட்டுனர் உரிமம் வழங்கி வாழ்த்து தெரிவித்தும் அவர்கள் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களை கொடியைசைத்தும் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மற்றும் மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

BabuDec 10, 2025 - 07:05:31 PM | Posted IP 162.1*****

valthukkal,,, ana vehicle maintanance problem sari panna training yeduthurkangala sir ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory