» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள ஈர்ப்பு வாகனம் வருகிற 30ஆம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள வாகன எண். TN-10 G 3030 ஈப்பினை வருகின்ற 30.12.2025 அன்று காலை 11.00 மணியளவில் முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. அதற்கு மேல் தாமதமாக வருபவர்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி கிடையாது.
மேலும் வாகனத்தினை ஏலம் எடுக்க விருப்பமுள்ள நபர்கள் 15.12.2025 முதல் 24.12.2025 வரை நேரில் வாகனத்தை பார்வையிட்டு 24.12.2025-க்குள் தங்களது ஆதார் அட்டையுடன் வாகனத்திற்கு ரூபாய் ஐந்தாயிரம் முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்ச ஏலத்தொகை கோருபவர்கள் ஏலத் தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கட்டணமாக 18% சேர்த்து முழுதொகையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்லலாம்.
பொதுவாக கூடுதலான தொகைக்கு ஏலம் கோருபவருக்கே ஏலம் கொடுக்கப்படும். எனினும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு கீழ் ஏலம் முடிவு செய்யப்பட்டால் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் திருநெல்வேலி அவர்களால் உறுதி செய்யப்பட்ட பின்னரே ஏலம் எடுத்தவருக்கு ஏல இனங்கள் உரிமை கொடுக்கப்படும். மேற்கண்ட ஏலத்தினை நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ ஏலம் நடத்தும் அதிகாரிக்கு முழு அதிகாரம் உண்டு என மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர்
முன்னாள் படைவீரர் நல அலுவலகம்
மிலிட்டரி லைன், பாளையங்கோட்டை
திருநெல்வேலி -627 002
தொலைபேசி எண்.0462-2901440
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)


