» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தோட்டத்தில் கேந்தி பூக்களை டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி : விலை வீழ்ச்சியால் விரக்தி

ஞாயிறு 4, ஜனவரி 2026 9:29:00 AM (IST)

சங்கரன்கோவில் அருகே விலை வீழ்ச்சியால் கேந்தி பூக்களை தோட்டத்திலேயே விவசாயி டிராக்டர் ஏற்றி அழித்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மல்லிகை, பிச்சி, செவ்வந்தி, சேவல், கேந்தி உள்ளிட்ட பலவகையான பூக்களை சாகுபடி செய்கிறார்கள். கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் கேந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் பலர் பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் கேந்தி பூக்களை விவசாயி ஒருவர் தனது தோட்டத்திலேயே டிராக்டர் ஏற்றி அழித்து உள்ளார். அதாவது சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கி முத்து. விவசாயியான இவர் தனது ேதாட்டத்தில் கேந்தி பூக்களை சாகுபடி செய்தார். தற்போது, அவற்றை டிராக்டர் மூலம் உழுது அழித்துள்ளார்.

இதுகுறித்து இசக்கிமுத்து கூறியதாவது: சங்கரன்கோவில் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கேந்தி பூ பயிரிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் ஓசூரில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக மலர் சந்தையில் கேந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்து, கடந்த சில நாட்களாக கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

நான் சுமார் 35 சென்ட் தோட்டத்தில் கேந்தி பூக்களை சாகுபடி செய்தேன். ஒரு பூச்செடி ரூ.2-க்கு வாங்கி 65 நாட்கள் பராமரிப்பது போன்றவை மூலம் இதுவரை ரூ.15 ஆயிரம் செலவு செய்துள்ளேன்.

ஆனால் தற்போது கேந்தி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் பூக்களை பராமரிப்பு செய்த செலவுக்கான தொகையும் கிடைக்காமல், பூப்பறித்த செலவுக்கும் கூட விலை போகாத காரணத்தால் கேந்தி பூக்களை டிராக்டர் ஏற்றி அழித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory