» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி

புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)



சேரன்மகாதேவியில் பொங்கலை முன்னிட்டு போலீஸ் பொதுமக்களுக்கான நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், சேரன்மகாதேவி காவல் நிலையம் சார்பில் பாரதிதாசன் தெருவில் நடைபெற்ற இப்போட்டியில் போலீஸôர், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உறியடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 

போட்டியை காவல் ஆய்வாளர் தொடக்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் தர்மராஜ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இதில், காவல் உதவி ஆய்வாளர்கள் சுடலைகண்ணு, அன்னஜோதி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரசுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory