» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)
தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டின் கதவை உடைத்து, ரூ.12லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). இவர் தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (37), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தம்பதியினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். நேற்று அவர்கள் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் ரூ.12லட்சம் ஆகும். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தப்பிச் சென்ற தடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் இருந்த கைரேகைகளைச் சேகரித்தனர்.
இப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:42:53 PM (IST)

