» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஸ்டெர்லைட் ஆலையைத் தரைமட்டமாக்க வேண்டும் : வைகோ ஆவேசம்!

புதன் 18, பிப்ரவரி 2026 8:31:46 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வீதி தொடங்கி நீதிமன்றம், ஆட்சி மற்றும் அதிகார மையங்கள் வரை எனத் தொடர்ந்து ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது 'பசுமை காப்பர்' என்ற பெயரில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தூத்துக்குடிக்குள் நுழைய முயல்வதை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.  பழைய தொழிலையே புதிய பெயரில் மீண்டும் நிலைநிறுத்த நிர்வாகம் முயற்சிக்கிறது. இதனை "பழைய கள்ளைப் புதிய மொந்தையில் ஊற்றுவது போன்ற செயல்" என்றும், "அரிதாரம் பூசிய புதிய அவதாரம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானிகளின் துணையோடு ஒரு போலி அறிக்கையைத் தயாரித்து, அதன் மூலம் ஆலை மீண்டும் இயங்க அனுமதி கோரி தமிழக முதலமைச்சரையும், நீதிமன்றத்தையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் அணுகியுள்ளது. "ஸ்டெர்லைட் எனும் நச்சுப் பூதம் நரித் தந்திரத்துடன் வேறு வடிவில் நுழைய முயற்சிக்கிறது. இந்த ஆலையை அடியோடு அகற்றுமாறு தமிழக அரசை வேண்டுகிறேன்." என வைகோ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்கள் கருத்து

MARIAPPANFeb 18, 2026 - 11:30:43 AM | Posted IP 162.1*****

தேர்தல் செலவுக்கு அய்யாவுகு பணம்

வாழ்த்துகள்Feb 18, 2026 - 09:33:50 AM | Posted IP 172.7*****

டூட்டியை துவக்கியாச்சா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory