» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போதிய மழையின்றி பயிர்கள் கருகியதால் சோகம்: வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 11:19:10 AM (IST)

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் போதிய மழையின்றி பயிர்கள் கருகியதால், இப்பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தனித்தனி மனுக்களுடன் வந்து மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், "கோவில்பட்டி வட்டத்தில் பருவமழை பொய்த்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியை வறட்சி நிறைந்த பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும். பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் போதிய நீரின்றி கருகிவிட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
சேதமடைந்த பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள எங்களது கிராமங்களில் இந்த ஆண்டு மழையளவு மிகக்குறைவாக உள்ளது. பெரும் செலவு செய்து பயிரிட்ட பயிர்கள் கண்முன்னேயே கருகி வருவது வேதனையளிக்கிறது. அரசு உடனடியாக தலையிட்டு எங்களைக் காக்க வேண்டும்," என விவசாயிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)


நல்லதுFeb 19, 2026 - 01:52:40 PM | Posted IP 162.1*****