» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்க முதல்வர் அனுமதிக்க மாட்டார் : துரை வைகோ உறுதி
வெள்ளி 20, பிப்ரவரி 2026 7:59:18 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுவதை முதல்வர் அனுமதிக்க மாட்டார் என்று மதிமுக முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி., தெரிவித்தார்.
கோவில்பட்டியில் மதிமுக முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை மதிமுக வரவேற்கிறது. இதன் மூலம் கூட்டணி மேலும் வலுப்பெறும். தமிழகத்தில் பிரதானப் போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது.
மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அறிவிக்கப்படும். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை இறுதி முடிவெடுக்கும். கூட்டணித் தலைமைக்கு இடங்களுக்காக நெருக்கடி கொடுக்கக் கூடாது. ஜனநாயகத்தைக் காப்பதற்கான இந்தத் தேர்தல் யுத்தத்தில், அனைவரும் வெற்றி இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும்.
நடிகர் விஜய், மத்திய பாஜக அரசை எதிர்த்தோ அல்லது தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தோ இன்னும் வெளிப்படையாகப் பேசவில்லை. எனவே, அவரது அரசியல் வருகை என்பது திமுக கூட்டணிக்குச் சாதகமாகத்தான் அமையும் என்று நான் பார்க்கிறேன்.
தற்போது மக்காச்சோளம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
அதேபோல், 'கிரீன் காப்பர்' என்ற பெயரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதனைத் தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். திமுக அரசின் சாதனைகள் மக்கள் அறிந்ததே. தேர்தல் நெருங்குவதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார்.
பேட்டியின் போது மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ஜி.ரமேஷ், மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினர் முத்துச்செல்வம், கிரிவலம் ஒன்றியச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)


இதுFeb 20, 2026 - 09:01:04 AM | Posted IP 162.1*****