» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் தினசரி ரயில் இயக்க வேண்டும் : சேம்பர் ஆஃப் காமர்ஸ் கோரிக்கை!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 12:34:22 PM (IST)

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரயிலை, பயணிகளின் நலன் கருதி உடனடியாக தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சேம்பர் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தக் கோரி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்-க்கு, தூத்துக்குடி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சேம்பர் தலைவர் ஆர். கோடீஸ்வரன் முக்கிய கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே தற்போது வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் ரயிலை, பயணிகளின் நலன் கருதி உடனடியாக தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
வண்டி எண். 16791/16792 தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி விரைவு ரயிலில், பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் ஏசி கோச்சுகளை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மற்றும் சென்னை இடையிலான பயண நேரத்தைக் குறைக்கவும், நவீன வசதிகளைப் பெறவும் இவ்விரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்.
தூத்துக்குடியிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாகச் செல்லும் வகையில் புதிய தினசரி விரைவு ரயில் ஒன்றை இயக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகளை உருவாக்க வேண்டும்.
தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)


BabuFeb 21, 2026 - 01:24:59 PM | Posted IP 104.2*****