» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடற்கரையில் மீன்கள் செத்து ஒதுங்கியதால் பரபரப்பு
திங்கள் 2, மார்ச் 2026 8:39:14 AM (IST)
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரையில் அதிக அளவில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமம் தருவைகுளம் ஆகும். இப்பகுதிக்கும் வெள்ளப்பட்டிக்கும் இடையே உப்பாற்று ஓடை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் இந்த ஓடை வழியாக வந்து தருவைகுளம் அருகே கடலில் கலப்பது வழக்கம். இந்த ஓடையின் குறுக்கே தற்போது புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
நேற்று, இந்த உப்பாற்று ஓடை கடலில் கலக்கும் பகுதியில் திடீரென மீன்கள் செத்து கரை ஒதுங்கிக் கிடந்தன. இதில் சுமார் அரை கிலோ எடையுள்ள மீன்கள் அதிக அளவில் இறந்த நிலையில் காணப்பட்டன. தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
உப்பாற்று ஓடை நீர் கடலில் கலக்கும் இடத்தில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ளதால், அந்தத் தண்ணீரில் ஏதேனும் நச்சுக் கழிவுகள் கலந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)


ஓட்டு போட்ட முட்டாள்Mar 2, 2026 - 09:09:27 AM | Posted IP 162.1*****