» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவம்: திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:05:13 PM (IST)
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இரட்டைக்கொலைச் சம்பவத்திற்கு அ.தி.மு.க. கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததும், 6 பேர் படுகாயமடைந்ததும் ஏற்க முடியாத பெருங்குற்றம் என அ.தி.மு.க. சாடியுள்ளது.சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாகக் கருதாமல், விளம்பர ஆட்சி நடத்தி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கே இத்தகைய கொடூரக் கொலைகளுக்குக் காரணம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சமூகத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அக்கிராம மக்கள் அச்சத்துடன் போராடி வருவதை அ.தி.மு.க சுட்டிக்காட்டியுள்ளது.
அரசின் மீது விமர்சனம்: "தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களைத் தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததா?" என்ற கேள்வியை அ.தி.மு.க எழுப்பியுள்ளது. தேர்தல் நேர ஆதாயத்திற்காக இத்தகைய மோதல்களைத் திமுக வளர்த்து விடுகிறதோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டனம்: மேடைகளில் மட்டும் சமத்துவம் பேசும் திமுக, நடைமுறையில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியது வெட்கக்கேடானது மற்றும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

