» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

விழுப்புரம் அருகே சவுக்குத் தோப்பில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த நபர், நெல்லையைச் சேர்ந்த வாலிபர் என்பதும், துணை நடிகையைத் தொந்தரவு செய்ததால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த சு.பில்ராம்பட்டு, வேடாலம் கிராம எல்லைப் பகுதியில் உள்ள சவுக்குத் தோப்பில், கடந்த 7-ம் தேதி உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இக்கொலை வழக்கை விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கடந்த 3-ம் தேதி இரவு கண்டாச்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய நபர் ஒருவர், யாரிடமோ செல்போனில் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. சைபர் கிரைம் உதவியுடன் அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது சென்னை முகப்பேரைச் சேர்ந்த சினிமா துணை நடிகை பூஜா (20) என்பது கண்டறியப்பட்டது.
போலீசார் பூஜாவைப் பிடித்து விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டவர் நெல்லை மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள நம்பைகுறிச்சியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ஜெயக்குமார் (40) என்பது தெரிந்தது. சென்னையில் தங்கி குறும்படங்கள் இயக்கி வந்த இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் பூஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பூஜாவை வைத்து குறும்படம் எடுப்பதாகக் கூறி அவருக்கு நகை, பணம் கொடுத்து உதவிய ஜெயக்குமார், நாளடைவில் தன்னை காதலிக்குமாறு பூஜாவை வற்புறுத்தியுள்ளார். காதலிக்க மறுத்தால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
ஜெயக்குமாரின் தொந்தரவு அதிகமானதால், அவரைத் தீர்த்துக்கட்ட பூஜா தனது காதலன் தேவாவுடன் (24) சேர்ந்து திட்டமிட்டார். இதற்காக ஜெயக்குமாரை நேரில் வரவழைத்து, தேவா மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலைச் சவுக்குத் தோப்பில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். இந்தக் கொலை தொடர்பாக சினிமா துணை நடிகை பூஜா (20), காதலன் தேவா (24), தேவாவின் நண்பர் அய்யப்பன் (24), பூஜாவின் தோழி துர்கா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட மேலும் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்தச் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

