» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமி கொலை வழக்கு: துரிதமாகச் செயல்பட்ட 25 காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி பாராட்டு
சனி 21, மார்ச் 2026 12:50:46 PM (IST)
சிறுமி கொலை வழக்கில், குற்றவாளியைத் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளுக்குத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி சரவணன் பாராட்டுத் தெரிவித்தார்..
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கில், குற்றவாளியைத் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளுக்குத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் பாராட்டுத் தெரிவித்தார்.
குளத்தூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்குத் தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். நுணுக்கமான புலனாய்வு மூலம் கொலையாளியைக் கண்டறிந்து, அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்பணிச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
காவல் ஆய்வாளர்கள்:
சக்திவேல் (விளாத்திகுளம்)
உமா மகேஸ்வரி (எப்போதும்வென்றான்)
அசோக்பாபு (சங்கரலிங்கபுரம்)
ராஜேஷ் (புதூர்)
காசிபாண்டியன் (தூத்துக்குடி வடபாகம்)
ஹரிஹரன் (முறப்பநாடு)
நவநீதகிருஷ்ணன் (கோவில்பட்டி மேற்கு)
சைரஸ் (தருவைக்குளம்)
சாந்தி (சைபர் குற்றப்பிரிவு)
திலீபன் (ஆறுமுகநேரி)
பவுல் ஏசுதாசன் (மாசார்பட்டி)
உதவி ஆய்வாளர்கள்:
ராஜபிரபு, மணிமாறன் (காவல் கட்டுப்பாட்டு அறை)
சண்முகம் (கோவில்பட்டி மேற்கு)
மாதவராஜா (விளாத்திகுளம்)
சுந்தர் (நாலாட்டின்புதூர்)
பெபின் செல்வ பிரிட்டோ (சிப்காட்)
செந்தில்குமார் (ஸ்ரீவைகுண்டம்)
சுப்புராஜ் (முறப்பநாடு)
முத்துராஜா (ஆறுமுகநேரி)
பாலன் (ஆழ்வார்திருநகரி)
காவுராஜன் (தூத்துக்குடி தென்பாகம்)
சுதாகரன், அச்சுதன் (சைபர் குற்றப்பிரிவு)
சுப்பிரமணியன் (சிறப்பு உதவி ஆய்வாளர், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை)
மக்கள் கருத்து
ஜெகன்Mar 21, 2026 - 07:07:28 PM | Posted IP 162.1*****
குற்றிவாளி என கருதப்படும் தர்மமுனீசுவரனை கைது செய்த தென்பாகம் உதவி ஆய்வளர் சங்கர் பெயர் எங்கே?
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சனி 21, மார்ச் 2026 4:39:16 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)


ஜெகன்Mar 21, 2026 - 07:08:18 PM | Posted IP 162.1*****