» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து : 60 பயணிகள் உயிர் தப்பினர்!

ஞாயிறு 22, மார்ச் 2026 8:49:24 AM (IST)



தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, வாகைகுளம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்தில் இருந்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று சனிக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில், அரசுப் பேருந்து ஒன்று 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டது. பேருந்து வாகைகுளம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதன் டீசல் டேங்க் (எண்ணெய் தொட்டி) பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டுப் புகை கிளம்பியது.

இதனைப் பார்த்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தைச் சாலையோரம் நிறுத்திப் பயணிகளை இறங்குமாறு எச்சரித்தார். பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் பரவித் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பயணிகள் அனைவரும் முன்கூட்டியே இறங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, இயந்திரக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory