» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)
தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் மற்றும் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிபட்டுள்ளன.
தேர்தல் விடுமுறை நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவும், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகவும் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தூத்துக்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கே.வி.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய சோதனையில் அந்த வீட்டில் பெட்டி பெட்டியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 263 மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், அடுத்த அறையில் தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூடை ரேஷன் அரிசி (மொத்தம் 1,000 கிலோ) பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த வீடு சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அவர் நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததும் தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 263 மதுபான பாட்டில்கள் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. கைப்பற்றப்பட்ட 20 மூடை ரேஷன் அரிசி முறைப்படி உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மது மற்றும் ரேஷன் அரிசி ஒரே இடத்தில் பிடிபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)


கந்தன்Mar 29, 2026 - 05:08:26 PM | Posted IP 162.1*****