» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
திங்கள் 30, மார்ச் 2026 8:42:33 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைப் புதிய தமிழகம் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைப் புதிய தமிழகம் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்கள்
ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி: டாக்டர் கிருஷ்ணசாமி (நிறுவனர் மற்றும் தலைவர், புதிய தமிழகம்).
ஸ்ரீவைகுண்டம் தொகுதி: ராஜசுதன்
கோவில்பட்டி தொகுதி: அதிக்குமார்
விளாத்திகுளம் தொகுதி: மாடசாமி
புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் கிருஷ்ணசாமியின் மகனுமான ஷியாம் கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நெல்லையில் போட்டியிடுகிறார்
இதன் பின் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: தற்போது 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்து இருக்கிறோம், மீதம் உள்ளதை விரைவில் அறிவிப்போம். புதிய தமிழகம் கட்சி 60 முதல் 70 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்தோம். அதற்காக அவரது வீட்டில் நேரில் சந்தித்தோம். வேலுமணியை வீட்டில் சந்தித்தோம். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னாள் அமைச்சர்களும் சந்தித்தார்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ எதுவுமே நடக்கவில்லை என்பது போல பேசுகிறார் இபிஎஸ்.
அதற்கு காரணம் என்னவென்று அவருக்குத்தான் தெரியும். நடந்ததை நடந்ததாகச் சொல்லுகிறோம். புறக்கணிக்கும் காட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும், பாடம் புகட்ட வேண்டும், களத்தில் சந்திக்க வேண்டும், ஓட ஓட விரட்ட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருக்கிறோம். அதிமுகவை முடிச்சுக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். எங்களால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். முன்னாள் முதல்வர், ஒரு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் அவர் பொய் சொன்னால் என்ன செய்வது? இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

