» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை - தூத்துக்குடி நேரடி ரயில் பாதை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி!

திங்கள் 30, மார்ச் 2026 9:00:27 AM (IST)

தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிக முக்கிய திட்டமான நெல்லை - தூத்துக்குடி நேரடி ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2026 சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத் திட்டமான 'நெல்லை - தூத்துக்குடி நேரடி ரயில் பாதை' குறித்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், தென் தமிழகத்தின் போக்குவரத்து வரைபடத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் ரயில்கள், வாஞ்சி மணியாச்சி சந்திப்பிற்குச் சென்று அங்கிருந்து திசை மாறி  தூத்துக்குடி செல்ல வேண்டியுள்ளது. இதனால்  வாஞ்சி மணியாச்சியில் ரயில் எஞ்சின் மாற்றப்படுவதால் 20 முதல் 30 நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் ஆகிறது.

சுற்றிச் செல்வதால் பயண தூரம் அதிகரிப்பதுடன், பயணக் கட்டணமும் சற்று கூடுதலாகிறது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வரும் சரக்கு ரயில்கள் மணியாச்சி வழியாகச் செல்வதால் நெரிசல் ஏற்பட்டு, மற்ற ரயில்களின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளபடி, நெல்லையிலிருந்து நேரடியாகத் தூத்துக்குடிக்கு புதிய அகலப்பாதை அமையும் பட்சத்தில்  நெல்லை - தூத்துக்குடி இடையேயான பயண நேரம் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளது. சுற்றிச் செல்லும் பாதை தவிர்க்கப்படுவதால் சுமார் 15-20 கி.மீ தூரம் குறையும்.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் மற்றும் திருநெல்வேலி இடையே சரக்கு பரிமாற்றம் வேகமெடுக்கும். இது இரு மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் உருவாக வழிவகுக்கும். சென்னை மற்றும் பிற நகரங்களிலிருந்து வரும் ரயில்களை எளிதாகத் தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு மாற்றி இயக்க முடியும்.

"தென்மாவட்டங்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுப்போம்" என தி.மு.க. தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. மணியாச்சிக்குச் செல்லாமல் நேரடியாக ரயில் பாதை அமைந்தால், அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் வணிகர்கள் பெரும் பயனடைவார்கள் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.


மக்கள் கருத்து

ஒட்டு போட்டு ஏமாந்தவன்Mar 30, 2026 - 05:47:43 PM | Posted IP 162.1*****

இருக்கிற தூத்துக்குடி சென்னை 2 ரயில்கள் விட துப்பில்லை, இதுல வேற. போங்கடா

SakthiMar 30, 2026 - 01:25:22 PM | Posted IP 172.7*****

This Election is Tamilnadu State Government Election How to Possible this Railway Project

தூத்துக்குடிக்காரன்Mar 30, 2026 - 10:12:48 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு மணியாச்சி பைபாஸ் லைன் உள்ளது. ஏற்கனவே பாலருவி விரைவு வண்டி ஒருமணி நேரத்தில் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு செல்கிறது. என்னுடைய ஆலோசனை - கைலாசபுரத்திலிருந்து நரைக்கிணறுக்கு ஒரு புதிய வழித்தடத்தை கேட்கலாம். ஆனால் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்குத்தான் ரயில் பாதை தேவை. ஏற்கனவே மீளவிட்டான் முதல் ஸ்பிக் வரை சரக்கு ரயில்பாதை உள்ளது. அங்கிருந்து ஆறுமுகநேரிக்கு ரயில்பாதையை உருவாக்கினால், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில்பாதை வந்துவிடும். குறிப்பு: தூத்துக்குடி கீழுரில் இருந்து திருச்செந்தூர் வரை மற்றும் மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் ரயில்கள், ரயில் எஞ்சின்களை முன் மற்றும் பின் கழட்டிமாட்டாமல் செல்ல ஏதுவாக மீளாவிட்டானில் ரயில்பாதையில் மாற்றம் வேண்டும்.

BabuMar 30, 2026 - 10:06:20 AM | Posted IP 162.1*****

yenku purilaya ilai ivangaluku therilaya ?ipo palaruvi vandi yepad poguthu maniyachi pooi pogalaye track than iruke maniyachi pogama nellai poga ithu yenna puthusa irukuthu palaruvi vandila pooi pathutu thittam solirukalamo

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory