» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ஏப்.3-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: இரண்டாம் கட்ட பயண விவரம் வெளியீடு!
புதன் 1, ஏப்ரல் 2026 11:19:44 AM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது இரண்டாம் கட்டத் தேர்தல் பிரசாரத்தை வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தனது முதற்கட்ட பிரசாரத்தைத் தொடங்கினார்.
இரண்டாம் கட்டப் பயணத் திட்டம்:
திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ளவிருக்கும் பிரசாரப் பொதுக்கூட்ட விவரங்கள் பின்வருமாறு:
03.04.2026 (வெள்ளி) மாலை 5:00 மணி - திருநெல்வேலி பாளையங்கோட்டை
04.04.2026 (சனி) காலை 9:00 மணி - நாகர்கோவில்
04.04.2026 (சனி) மாலை 5:00 மணி - சங்கரன்கோவில்
05.04.2026 (ஞாயிறு) காலை 9:00 மணி - விருதுநகர்
05.04.2026 (ஞாயிறு) மாலை 5:00 மணி - திருமங்கலம்
இந்த பொதுக்கூட்டங்களில் அந்தந்தப் பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குச் சேகரிக்க உள்ளார். முதற்கட்ட பிரசாரம் திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டமாகத் தென் மாவட்டங்களில் அவர் மேற்கொள்ளும் இந்தப் பயணம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.5!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:42:22 PM (IST)

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கட்டாயம்: ஆட்சியர் இரா.சுகுமார் அதிரடி உத்தரவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:08:56 PM (IST)

பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: நயினார் நாகேந்திரன் உறுதி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:49:44 PM (IST)

இலவசமாக மணல் கேட்டு மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் - காவலர் பணி இடைநீக்கம்: எஸ்.பி., அதிரடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:41:43 AM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு
புதன் 1, ஏப்ரல் 2026 4:43:34 PM (IST)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

