» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 2½ வயது பெண் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை!
புதன் 1, ஏப்ரல் 2026 8:13:11 AM (IST)
நெல்லையில் கணவரைப் பிரிந்த வேதனையில், 2½ வயது பெண் குழந்தையைத் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டுத் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே பாளையங்கோட்டை தாலுகா, நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் தங்கம் (21). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தனிஷ்கா (2½) என்ற பெண் குழந்தை இருந்தது.
திருமணமாகிச் சில நாட்களிலேயே தம்பதியிடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கம், தனது குழந்தையுடன் நடுவக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
தங்கம் கடந்த சில நாட்களாகக் கணவரைப் பிரிந்த ஏக்கத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தங்கத்தின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். மாலை 6 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பிய தாய் லட்சுமி, படுக்கையறைக்குச் சென்றபோது அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அறையில் ஒரு சேலையில் பேத்தி தனிஷ்காவும், மற்றொரு சேலையில் மகள் தங்கமும் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கம், தனது மகளை முதலில் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திருமணமாகி 3½ ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து நெல்லை உதவி ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார். 2½ வயதுக் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1775022580.jpg)
நெல்லையில் ஏப்.3-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: இரண்டாம் கட்ட பயண விவரம் வெளியீடு!
புதன் 1, ஏப்ரல் 2026 11:19:44 AM (IST)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

