» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பஜ்ஜி போட்டு நூதன பிரச்சாரம்: தூத்துக்குடி தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத்திற்கு உற்சாக வரவேற்பு!

புதன் 1, ஏப்ரல் 2026 5:43:19 PM (IST)



தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் ஸ்ரீநாத்திற்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகத் தூத்துக்குடிக்கு வந்த வேட்பாளர் ஸ்ரீநாத்திற்கு, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மேளதாளங்கள் முழங்கச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த ஒரு தேநீர்க் கடைக்குச் சென்ற வேட்பாளர் ஸ்ரீநாத், அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். 

அப்போது, அந்த உணவகத்தில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, விறகு அடுப்பைப் பயன்படுத்திப் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே, கடையின் மாஸ்டரிடம் இருந்து கரண்டியை வாங்கிய ஸ்ரீநாத், தாமே விறகு அடுப்பில் பஜ்ஜி போட்டு நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

எரிவாயு தட்டுப்பாட்டால் சாமானிய மக்கள் மற்றும் சிறுவியாபாரிகள் படும் இன்னல்கள் களையப்பட வேண்டும் என அங்கிருந்தவர்கள் வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அவர் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். 


மக்கள் கருத்து

சிட்டிசன்Apr 1, 2026 - 08:35:51 PM | Posted IP 172.7*****

இதையே தான் தேர்தல் சமயத்தில் மற்ற கட்சிகளும் செய்கிறது ...இதற்கு எதற்காக நீங்கள் மாற்றத்திற்கான புதிய கட்சி என்று ஆரம்பித்து தேர்தலை சந்திக்க வேண்டும் ?? மாற்றத்திற்கான செயல்திட்டங்களை சொல்லுங்கள் அதை கோடி கோடியாக சேமித்து வைத்திருக்கும் பணத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து மக்களுக்காக செய்யுங்கள் ...மாற்றத்தை அப்படியும் தொடங்கலாம் .

அஜிதாApr 1, 2026 - 07:52:00 PM | Posted IP 104.2*****

யார்ரா இந்த பப்ஸ் வாயன் இந்த நாய்க்கு தூத்துக்குடி சாதி வெறியர்கள் 1000 பேர் ஓட்டு விழுமா

rajjkumarApr 1, 2026 - 06:11:42 PM | Posted IP 172.7*****

kannadi kalathitu pajji potta vekatha

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory