» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வி.வி.டி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் : அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் வாக்குறுதி!
சனி 4, ஏப்ரல் 2026 6:53:22 PM (IST)

விவிடி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் இன்று மாலை கலைஞர் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் அரசியல் கருத்துகளை வெளியிட்டார். செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: நம்முடைய தேர்தல் அறிக்கையே இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார். மக்களுக்கு நேரடியாக பயன்படும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதில் முக்கியமாக, பெண்களுக்கு ₹8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பன் மூலம் அவர்கள் அருகிலுள்ள கடைகளில் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும், பெண்கள் நலத்திட்டங்கள் குறித்து பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அதை ₹2000 ஆக உயர்த்த உள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு ₹2500, முதியோருக்கு ₹2000 வழங்கப்படும். மீனவர்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்து, மீன்பிடித் தடை கால உதவித்தொகை ₹500 இலிருந்து ₹8000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அதை ₹12000 ஆக மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் குறித்து, இணைப்பு சாலைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். வி.வி.டி.சிக்னல் மேம்பாலம் அமைப்பதில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் விவிடி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும். வேலை வாய்ப்பு குறித்து, பர்னிச்சர் பார்க் திட்டம் விரைவில் நிறைவு பெறும். அதே பகுதியில் வின் பாஸ்ட் கார் நிறுவனம் தொடங்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
அரசியல் விமர்சனங்களில், பெண்களை மதிக்க தெரியாத கூட்டம் தான் அதிமுக. ஜெயலலிதா போன்ற பெண் தலைவரை கொண்ட கட்சி என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். என்னையோ, கனிமொழியையோ இழிவாக பேசுபவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் குறித்து, அவரது பேச்சு தரக்குறைவானது. மக்கள் அதற்கு தகுந்த பதில் தருவார்கள். மழைக்காலங்களில் நான் நேரில் சென்று பணியாற்றியதை மக்கள் அறிவார்கள்.
மேலும், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி வந்து 6 தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார் என்றார்.
மக்கள் கருத்து
கம்ப்யூட்டர் பொறியாளர்Apr 4, 2026 - 10:08:17 PM | Posted IP 104.2*****
அப்படியே சொல்லி சொல்லி 13 வருஷமாக ஓட்டியாச்சி. இனி எதனை வருஷம் ஓட்ட போகிறதோ என்று தெரியவில்லை
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)


BabuApr 6, 2026 - 09:12:38 AM | Posted IP 172.7*****