» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)

கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் ஒதுக்குவதில் இருந்த சட்டச் சிக்கல்களைத் தீர்க்க அதிமுக அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் 4-வது முறையாகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, கோவில்பட்டி அதிமுக தேர்தல் அலுவலகத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க, சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் உற்சாகமாக ஊர்வலமாக வந்த அவர், சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஹிமான்சு மங்கலிடம் தனது மனுவைச் சமர்ப்பித்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி இந்திரா காந்தி மனுத்தாக்கல் செய்தார்.
மனுத்தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார்: "கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் ஒதுக்குவதில் இருந்த சட்டச் சிக்கல்களைத் தீர்க்க அதிமுக அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்திருந்தால், அவரது உடலை நல்லடக்கம் செய்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எனது துறை சார்பாக உடனடியாக அனுமதி வழங்கினோம்."
ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளைத் திமுகவினர் தங்கள் வசதிக்காகவே கையாண்டனர். தற்போது தேர்தல் நேரத்திற்காக முதல்வர் ஸ்டாலின் உண்மைகளை மறைத்துப் பேசுகிறார். அதிமுக தொடங்கப்பட்டு 54 ஆண்டுகள் ஆகிறது. புதிதாகத் தொடங்கப்படும் எந்தக் கட்சியாலும் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்க முடியாது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தொடர் வெற்றிகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வந்ததாகச் சரித்திரமே இல்லை. அந்த அடிப்படையில் இந்தத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் உறுதி. மேலும், அதிமுகவின் சிறப்பான மக்கள் பணியால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
மக்கள் கருத்து
ஓட்டு போட்ட முட்டாள்Apr 5, 2026 - 02:16:56 PM | Posted IP 162.1*****
கொடுத்ததே பெரிய தப்பு, மெரினா பீச் என்றால் திமுக குடும்ப கல்லறையா?
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)


ஆமாApr 6, 2026 - 09:06:50 AM | Posted IP 172.7*****