» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரின் காரை மதுபோதையில் வாலிபர் ஒருவர் சொகுசு காரில் துரத்தி வந்து, அவதூறாகப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான திரு. விஷூ மகாஜன், நேற்று முன்தினம் மாலையில் தேர்தல் ஆய்வுப் பணிகளுக்காகக் காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் உதவியாளர் மற்றும் பாதுகாப்புப் போலீசார் இருந்தனர். ஆட்சியரின் கார் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் 3-வது மைல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வெள்ளை நிற சொகுசு காரில் வந்த வாலிபர் ஒருவர் ஆட்சியரின் காரை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
முந்திச் செல்ல முடியாத ஆத்திரத்தில், அந்த வாலிபர் ஆட்சியரின் காரைத் தொடர்ந்து அதிவேகமாகத் துரத்தி வந்துள்ளார். ஆட்சியரின் கார் வி.வி.டி சிக்னல் அருகே வந்தபோது சிவப்பு விளக்கு எரிந்ததால் நிறுத்தப்பட்டது. அப்போது பின்னால் துரத்தி வந்த வாலிபர், ஆட்சியரின் காரை முந்திச் சென்று குறுக்காகத் தனது காரை நிறுத்தினார். மேலும், காரில் இருந்தவாறே ஆட்சியரைப் பார்த்து அந்த வாலிபர் அவதூறான வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த அந்த வாலிபரைக் கண்டறிந்த போலீசார், அவர் பயன்படுத்திய சொகுசு காரை நேற்று பறிமுதல் செய்தனர்.
மதுபோதையில் இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபட்ட அந்த வாலிபரைப் பிடித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)


BabuApr 6, 2026 - 09:09:16 AM | Posted IP 104.2*****