» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)
நெல்லை - செங்கோட்டை ரயிலில் பெண் பயணியின் நகையைப் பறிக்க முயன்ற குற்றாலநாதர் கோவில் ஊழியரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 12-ஆம் தேதி நெல்லையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற பயணிகள் ரயிலில் கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் பயணம் செய்தார். ரயில் தென்காசி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அதே பெட்டியில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சாந்தியின் கழுத்தில் இருந்த நகையைப் பறிக்க முயன்றுள்ளார். சாந்தி கூச்சலிடவே, பிடிபடுவோம் என்ற பயத்தில் அந்த நபர் ரயிலிலிருந்து இறங்கித் தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட சாந்தி அளித்த புகாரின் பேரில், தென்காசி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரயில்வே டிஎஸ்பி லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், நகை பறிக்க முயன்றவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் கீழரத வீதியைச் சேர்ந்த கருப்பசாமி (55) என்பது தெரியவந்தது. இவர் குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ் புலவராகப் பணியாற்றி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கருப்பசாமியைப் போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். கைதான அவர் மீது காவல்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியரே ரயிலில் நகை பறிக்க முயன்ற சம்பவம் சக பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)


