» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாக்கு மூட்டையில் ரூ.35.72 லட்சம் : பறக்கும் படை சோதனையில் சிக்கியது!

திங்கள் 20, ஏப்ரல் 2026 8:54:15 AM (IST)

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35.72 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று கோவில்பட்டி - கடலையூர் சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையுடன் வந்த இளைஞர் ஒருவரைப் போலீசார் மறித்துச் சோதனை செய்தனர். சோதனையில், அவர் வைத்திருந்த சாக்கு மூட்டைக்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உடனே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான குழுவினர், பணத்தைக் கொண்டு வந்த கோவில்பட்டி அத்தைகொண்டான் இந்திரா நகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் உத்தரகுமாரிடம் (32) விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரிடம் இருந்த ரூ.35 லட்சத்து 72 ஆயிரத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி சாக்கு மூட்டையில் இவ்வளவு பெரிய தொகை கடத்தப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

கந்தன்Apr 21, 2026 - 01:20:18 PM | Posted IP 104.2*****

தேர்தலில் பணம் பொருள் பெற்று வாக்கு செலுத்துவதை தடுக்க நேர்மையாளராக மாற்ற விழிப்புணர்வு தமிழ் நாடு மாநில 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பதியப்பெற்ற கட்சிகளின் அனைத்தும் மாநில அல்லது தேசிய தலைமை மூலமாக தனித்தனியாக 22/4/26 புதன் கிழமை மற்றும் 23/4/26 வியாழக்கிழமை செய்தி நாளிதழ் மற்றும் காணோளிபதிவின் மூலமாக தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் மூலமாக கட்டாயமாக வாக்கிற்கு அந்தந்த கட்சி சார்பாக எந்த வேட்பாளராக இருந்தாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பணமோ பொருளோ அளித்தால் தயவு செய்து வாக்களிக்க வேண்டாம் . கட்சியின தேர்தல் அறிக்கைகள் அடிப்படையாக மட்டும் உங்களுக்கு எதிர்பார்ப்பு விருப்பமான தேர்தல் அறிக்கைகள் அடிப்படையாக அறிவித்த கட்சிக்கு வாக்களியுங்கள் . தேர்தலில் வாக்கிற்கு Voteற்கு பணம் அல்லது பொருள் தரும் கட்சி அல்லது வேட்பாளர் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் துரோகி( தேசத்துரோகி ). அதனை பெற்று வாக்களிப்பவரும் தேசத்துரோகி . உங்கள் வாக்கு தான் தங்களின் நேர்மை நன்னடத்தை நாட்டுப்பற்றை நிரூபிக்கும். வாக்காளர் நாட்டுப்பற்று உடையவரா அல்லது தேசத்துரோகியா?. ஆகவே வாக்கிற்கு பணம் பொருள் அளிக்கும் வேட்பாளருக்கு வாக்கினை செலுத்தி நாட்டின் துரோகி ஆகாதீர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தேர்தல் அறிக்கையாக கொண்ட வேட்பாளருக்கு வாக்களியுங்கள் . என அனைத்து கட்சி தலைமை நிர்வாகிகள் மற்றும் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு விளம்பரம் கட்டாயமாக 23/4/26 மாலை 6 மணி முதல் 23/4/26 மாலை 6 மணி வரை செய்ய வேண்டும். இந்த விளம்பர செலவினத்திற்கு தேர்தல் நடத்தை காலத்தில கணக்கில காட்டாது பிடிபட்ட கருப்புபண நிதியை பயன்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த விழிப்புணர்வு விளம்பரங்களை கட்டாய பிரச்சார விளம்பரமாக செயல்படுத்தாத கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் தேர்தலில் போட்டியிட /தேர்தல் பிரச்சாரம் செய்ய/விளம்பரம் செய்ய/ கருத்துக்கணிப்பு எடுக்க / கருத்துகணிப்பு வெளியிட கட்டாயமாக தடைவிதிக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory