» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை அருகே உள்ள தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இத்திருக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 14-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி, 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக நடைப்பெற்றது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் மற்றும் இரவில் சப்பர வீதி உலா என ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். தேர் தெற்கு ரத வீதியில் தொடங்கி மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. ரத வீதிகளின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "நமச்சிவாய" கோஷங்கள் முழங்க வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.
வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் சிவபக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ரத வீதிகளில் பக்தர்களுக்கு மோர் மற்றும் பானகம் வழங்கினர். தச்சநல்லூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாகத் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
தேரோட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மதியம் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாமிரபரணி நதிக்கரையில் சுவாமி, அம்பாளுக்குத் தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் சாந்தி தேவி, அர்ச்சகர் ஹரிஹர சர்மா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

வீடுபுகுந்து பேராசிரியையை அரிவாளால் தாக்கி 14 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் துணிகரம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:13:10 AM (IST)

