» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அமலி பள்ளி ஆசிரியை இனிகோவுக்கு வெற்றி விழா
புதன் 3, ஜூன் 2026 8:55:24 AM (IST)

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் இருதய குளத்தின் பாரம்பரியமான பள்ளி "அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி”. அருட் சகோதரிகள் அன்பாலும், ஆற்றலாலும் பிரகாசிக்கும் மகளிர் கல்விக்கூடம். சாதாரண அடித்தட்டு மக்களுக்கு, ஏழை பெற்றோரின் குழந்தைகளுக்கு அமலி பள்ளி ஒரு போதிமரம். இங்கு தொழிற்கல்வி ஆசிரியராக 37 ஆண்டுகளாக கல்விச் சேவையாற்றியவர் மரிய இனிகோ.
1989 ல் துவங்கிய ஆசிரியர் பணியை 2026 ல் நிறைவு செய்த மரிய இன்கோவிற்கு வெற்றி விழா அம்பையில் எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏழை மாணவியரை கல்விக் கரையேற்றிய அமலி பள்ளி ஆசிரியருக்கு ஊர் கூடி வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தது. பள்ளித் தலைமையாசிரியை அருட் சகோதரி சூ. அருள் மேரி, தாளாளர் அருட் சகோதரி இருதய மேரி ஓய்வு பெற்ற ஆசிரியை மரிய இனிகோவிற்கு வெற்றித் திலகமிட்டு வாழ்த்தினர். அருள் தந்தை அருள் அம்புரோஸ் வாழ்த்துச் செய்தி வழங்கினார்.
சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் மரிய இனி கோவை வாழ்த்தி பேசினார். கணவர் சேவியர், மகன் டாக்டர். அம்ரிஷ், மருமகள் டாக்டர். சுஜில், மகள்கள் ஜெனி, டிரினி, மருமகன்கள் ஜான் கிளைட்டன், விகார் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வி கே புரம் வட்டார முக்கியஸ்தர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், முன்னாள் மாணவியர், அரிமாக்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். அருட் சகோதரி பவுலின் அமுதா, கிரிக்கெட் மூர்த்தி, தொழிலதிபர் மார்ட்டின், அம்பை காந்தி கலந்து கொண்டனர். ஒரு உதாரண ஆசிரியராக இனிகோ அரங்கில் அடையாளப்படுத்தப்பட்டார். பணி நிறைவு பாராட்டு விழாவை வெற்றி விழாவாக வித்தியாசமாக நடத்திக் காட்டியது வெகுவாக பேசப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)

மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!
புதன் 10, ஜூன் 2026 4:58:52 PM (IST)


