» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

திருநெல்வேலியில், உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று (13.07.2026) மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட குடும்ப நல இயக்ககம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
1987 ஆம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டி விட்டது. சீரான மக்கள் தொகை வளர்ச்சியை உருவாக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் "தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும் திட்டமிடப்படாத கர்ப்பங்களை தடுப்பதற்காகவும் கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினை பேணுவோம்" என்ற கருப்பொருளுடன் மாணவிகள் குடும்ப நலம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு சென்றனர்.
பேரணியானது வ.உ.சி மைதானத்தில் தொடங்கி தூய சவேரியார் பள்ளியில் நிறைவடைந்தது. மேலும், குடும்பநலம் மற்றும் தாய்சேய் நல சேவைகளை தங்கு தடையின்றி வழங்குவதன் அவசியம் குறித்தும், திருமணத்துக்கு ஏற்ற வயது, தாய் சேய் நலம், 3 வருட பிறப்பு இடைவெளி, உயர் வரிசை குழந்தை பெற்ற தாய்மார்களின் எண்ணிக்கையை குறைத்தல், இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, வ.உ.சி மைதானத்தில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தலைமையில் செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி மாணவியர்கள், அலுவலர்கள் பலர் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) கி.லதா , மாவட்ட சுகாதார அலுவலர் மரு.முரளி சங்கர் , மக்கள் கல்வி தகவல் அலுவலர்ரமேஷ் , இளநிலை நிர்வாக அலுவலர் கூத்தநயினார் (எ) செந்தில் , மாவட்ட விரிவாக்க கல்வியாளர் வைஷ்ணுதேவி , வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் மற்றும் குடும்ப நல அலுவலக பணியாளர்கள், செவிலியர் பள்ளி மற்றும் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


