» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் சாலையோர ஆக்கிரமிப்பு, பேனர்கள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 11:45:50 AM (IST)

தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அமைக்கப்பட்டிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை மாநகராட்சிப் பணியாளர்கள் அதிரடியாக அகற்றினர்.
தூத்துக்குடி சிதம்பர நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள நடைபாதைகளில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பலத்த காற்று வீசினால் விழும் நிலையில் இருந்த விளம்பரப் பேனர்கள், பதாகைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அறிவிப்புப் பலகைகள் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து வந்த புகார்களைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரின் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பேனர்களையும் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே அப்புறப்படுத்தினர்.
மேலும், இப்பகுதியின் முக்கியச் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள், வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நடைபாதை பகுதிகள் மற்றும் போக்குவரத்திற்குப் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு உள்கட்டமைப்புகள் அனைத்தும் மாநகராட்சிப் பணியாளர்களால் நேற்று முழுமையாக அகற்றப்பட்டன.
சாலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்தால் கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
ஏரியா காரன்Jun 4, 2026 - 01:03:02 PM | Posted IP 172.7*****
எல்லா இடத்திலும் சிமெண்ட் சாலைகளில் மண் தேங்கி இருக்கு , திடீர் Brake பிடிக்கும்போது வழுக்கி விழும் ஆபத்து இருக்கு அதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்???? அந்த அறிவு மாநகராட்சிக்கு இல்லை
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பேருந்து - பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: மாணவர்கள் உட்பட 10பேர் படுகாயம்!
வியாழன் 4, ஜூன் 2026 5:56:09 PM (IST)

நெல்லையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 12:26:10 PM (IST)

நிதி நிறுவன உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் : பெண் விஏஓ கைது! – உதவியாளரும் சிக்கினார்!
வியாழன் 4, ஜூன் 2026 8:43:57 AM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
வியாழன் 4, ஜூன் 2026 8:37:41 AM (IST)

2016 ராதாபுரம் தேர்தல் முடிவுகள் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
புதன் 3, ஜூன் 2026 4:55:48 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி ஆய்வு!
புதன் 3, ஜூன் 2026 3:41:32 PM (IST)



muthuJun 4, 2026 - 01:36:09 PM | Posted IP 172.7*****