» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு; பொதுமக்கள் ஆர்வம் – மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:08:16 AM (IST)
தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைந்த போதிலும் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கடலில் மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமலில் உள்ளதால், கடந்த சில வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களுக்கு இந்தத் தடை இல்லாததால், அவர்கள் வழக்கம்போல் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
வழக்கமாகத் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் சனிக்கிழமைகளில் அதிக அளவிலான மீன்களுடன் கரைக்குத் திரும்புவது வழக்கம். இதனால் சனிக்கிழமைகளில் துறைமுகத்தில் விற்பனைக்காக ஏராளமான மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்த வாரம் ஆழ்கடலுக்குச் சென்ற நாட்டுப்படகு மீனவர்களுக்குக் கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாகப் போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் நேற்று குறைந்த அளவு மீன்களுடனேயே கரைக்குத் திரும்பி வந்தனர்.திரேஸ்புரம் துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாகக் காணப்பட்டதால், கடந்த வாரத்தைப் போன்றே விலையில் பெரிதளவில் மாற்றமின்றி மீன்கள் விற்பனையாகின.
நேற்றைய சந்தை விலை விபரம் (ஒரு கிலோ கணக்கில்): சீலா மீன்: ₹1700 வரை, விளை மீன் / ஊழி மீன்: ₹800 வரை, நண்டு: ₹800 முதல் ₹900 வரை, பாறை மீன்: ₹550 வரை, கேரை / சூறை மீன்: ₹400 வரை, சாளை மீன்: ஒரு கூடை ₹2000 வரை விற்பனையாகின
மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகு மீன்கள் சந்தைக்கு வராததால், மாற்று வாய்ப்பான நாட்டுப்படகு மீன்களை வாங்குவதற்காகக் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரேஸ்புரம் துறைமுகத்தில் குவிந்தனர். அவர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் தங்களுக்குத் தேவையான மீன்களை மிகவும் ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். மீன்களின் விற்பனை விறுவிறுப்பாகவும் மும்முரமாகவும் நடந்த நிலையில், வரத்து குறைந்த காலத்திலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
சனி 6, ஜூன் 2026 10:30:58 AM (IST)

தாமிரபரணி நதியைக் காக்கத் தீவிர நடவடிக்கை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் உறுதி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:34:53 PM (IST)

பெண் குழந்தையை சாக்குப்பையில் போட்டுத் துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது!
வெள்ளி 5, ஜூன் 2026 12:45:29 PM (IST)

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசு நியமனம்
வெள்ளி 5, ஜூன் 2026 8:45:07 AM (IST)

அரசு பேருந்து - பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: மாணவர்கள் உட்பட 10பேர் படுகாயம்!
வியாழன் 4, ஜூன் 2026 5:56:09 PM (IST)


