» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சட்டமன்றம் தலைவர்களை இழிவுபடுத்தும் இடமாக மாறிவிடக்கூடாது: கனிமொழி எம்பி கவலை!
வியாழன் 25, ஜூன் 2026 8:55:46 PM (IST)
மத்திய அரசோடு எப்போதுமே இணக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே மக்கள் எடுக்கிறார்கள் என்றும், கூட்டணியில் இருப்பவர்கள் அதனை விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, சட்டமன்ற விவாதங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, பொதுமக்கள் எப்போதும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கையே விரும்புவதாகவும், தற்போதைய கூட்டணியில் உள்ளவர்கள் இந்த எதார்த்தத்தை விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.சட்டமன்றம் என்பது ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, தனிமனிதர்களையோ அல்லது அரசியல் தலைவர்களையோ இழிவுபடுத்தும் இடமாகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளைப் பேசும் மேடையாகவோ மாறிவிடக்கூடாது என்று கனிமொழி வலியுறுத்தினார். அரசியல் வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது அனைவருக்கும் சகஜமானது என்று சுட்டிக்காட்டிய அவர், உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் அதனை அவமதிக்கும் வகையில் பேசுவது முறையல்ல என்றும், அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலாவது இந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ள காவல்துறை குறித்தும், மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். இத்தகைய குற்றங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும் போதெல்லாம், முதலமைச்சர் கடந்த கால ஆட்சியைக் காரணம்காட்டித் தப்பிக்க முயலக் கூடாது என்று சாடினார்.
குற்றச்சாட்டுகளை யார் மீது சுமத்தலாம் என்று யோசித்துத் தனது பொறுப்பில் இருந்து வெளியே வரக் காரணங்களைத் தேடாமல், தற்போது நடந்து வரும் வன்முறைகளுக்குத் தீர்வு காண அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் நிலவும் பயத்தைப் போக்க வேண்டியதே ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை என்றும் கனிமொழி தனது பேட்டியில் திட்டவட்டமாகக் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)



என்னதுJun 25, 2026 - 09:47:24 PM | Posted IP 162.1*****