» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வ.உ.சி பெயர் இருட்டடிப்பு விவகாரம்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் வ.உ.சி. எழுச்சி பேரவை கோரிக்கை மனு!

வியாழன் 9, ஜூலை 2026 8:36:55 AM (IST)

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள வழித்தடப் பலகைகளில் 'புதிய துறைமுகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள பெயரை உடனடியாக நீக்கிவிட்டு, 'வ.உ.சிதம்பரனார் துறைமுகம்' என்று குறிப்பிடக் கோரி தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவை சார்பாக மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வ.உ.சி. எழுச்சி பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள வழித்தடங்கள், பேருந்தின் பெயர் பலகைகளில் 'புதிய துறைமுகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி புதிய துறைமுகம் என்ற பெயர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசால் 'வ.உ. சிதம்பரனார் துறைமுகம்' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வப் பெயர் மாற்றச் செய்தி கூடத் தெரியாமல் தூத்துக்குடி மாநகராட்சிப் போக்குவரத்து வழித்தடங்கள், பேருந்துகளில் 'புதிய துறைமுகம்' எனக் குறிப்பிட்டு வ.உ.சிதம்பரனாரின் பெயரை இருட்டடிப்பு செய்துள்ளனர். எனவே, தற்போது பேருந்து வழித்தடங்கள், பேருந்துகளில் உள்ள 'புதிய துறைமுகம்' என்ற பெயரை உடனடியாக நீக்கிவிட்டு 'வ.உ.சிதம்பரனார் துறைமுகம்' என்று குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மை விளம்பிJul 9, 2026 - 11:18:21 PM | Posted IP 162.1*****

பேருந்தில் 'புதிய துறைமுகம்' என்று போடுவதில் தவறில்லை. 'புதிய துறைமுகம்' என்பது மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான பெயர். தூ.டி துறைமுகத்தில் 'புதிய துறைமுகம் - 'பழைய துறைமுகம்' என்று இரண்டு பிரிவுகள் உண்டு (Zone A & Zone B). 'வ.ஊ.சி துறைமுகம்' என்றால் அது இரண்டையும் குறிக்கும். மக்களுக்கு குழப்பம் ஏற்படும். 'வ.ஊ.சிதம்பரனார் துறைமுகம்' என்பது அதிகாரபூர்வமான பெயர். அது செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சியின் பெருமையை என்றும் பேசும். Certain community wing is making the issue unnecessarily.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory