» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுப் பேருந்துகளில் 'விடியல்' வார்த்தை நீக்கம்: இனி வெறும் 'மகளிர் பயணம்' மட்டுமே!

வியாழன் 9, ஜூலை 2026 3:59:16 PM (IST)

vidiyalBus.jpg

தமிழகத்தில் பெண்களுக்குக் கட்டணமில்லா அரசு நகரப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'மகளிர் விடியல் பயணம்' என்ற வாசகம், 'மகளிர் பயணம்' என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் கட்டணமில்லாமல் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் 'மகளிர் விடியல் பயணத் திட்டம்' கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்திற்கு மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும், முந்தைய அரசின் இத்திட்டம் உட்படப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகளில், அவர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளும் விதமாக முன் மற்றும் பின் பகுதிகளில் எழுதப்பட்டிருந்த 'மகளிர் விடியல் பயணம்' என்ற வாசகத்திலிருந்து 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தத் திட்டத்தின் அதிகாரப்பூர்வப் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முந்தைய திமுக அரசு கொண்டு வந்திருந்த ‘நான் முதல்வன்’ என்ற முதன்மையான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் பெயரும், தவெக அரசு பொறுப்பேற்ற பின் ‘திறன் தமிழ்நாடு’ என மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

DavidJul 9, 2026 - 08:17:44 PM | Posted IP 172.7*****

பெயரை மாற்றியது சரி தங்களின் வாக்குறுதி அனைத்து பேருந்திலும் மகளிர்க்கு இலவசம் என்னாச்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory