» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாலிபரை ஆயுதங்களுடன் விரட்டிய 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 10, ஜூலை 2026 8:26:17 AM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் விரட்டிய 4 இளம்சிறார்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம் (44). கன்னியாகுமரியில் வேலை செய்துவரும் இவரது மகன் செல்வகணேஷ் (20) காலில் ஏற்பட்ட காயம் காரணமாகச் சிகிச்சைக்குச் செல்வதற்காகத் தனது தாயுடன் மாதாநகர் சந்திப்பில் காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் மாரிவிஜய் (23), தஸ்நேவிஸ் நகர் பத்மநாபன் மகன் பிரகாஷ் (21) மற்றும் 4 இளம்சிறார்கள் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல், முன்விரோதம் காரணமாகச் செல்வகணேஷிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாகப் பேசியுள்ளது. மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் செல்வகணேஷை வெட்ட முயன்றுள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்கச் செல்வகணேஷ் ஓடியபோது, அந்த ஆயுதக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சத்தமிட்டதால் அந்தப் பயங்கரவாதக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து ராஜம் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தலைமறைவாக இருந்த மாரிவிஜய், பிரகாஷ் மற்றும் 4 சிறுவர்கள் உட்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!
வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா துவக்கம்: 12-ஆம் தேதி வளைகாப்பு உற்சவம்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:37:22 AM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

ரெட்டியார்பட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வியாழன் 9, ஜூலை 2026 11:38:46 AM (IST)

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)

திருவேங்கடம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 3:55:45 PM (IST)



கைய காலJul 10, 2026 - 03:38:21 PM | Posted IP 162.1*****