» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்களோடு நின்றவர் யார், தவிக்கவிட்டுச் சென்றவர் யார் என்று மக்களுக்குத் தெரியும்: கனிமொழி பதில்!

வெள்ளி 10, ஜூலை 2026 3:27:16 PM (IST)

KanimozhiVijayKarur.jpg

கரூர் சம்பவத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார், தவிக்கவிட்டுச் சென்றவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று முதல்வர் விஜயின் கருத்துக்கு எம்பி கனிமொழி எம்பி பதில் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் அரசு பணி ஆணை வழங்க உள்ள நிலையில், கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், கரூர் சம்பவம் தொடர்பாகத் தி.மு.க. அரசையும் காவல்துறையையும் கடுமையாகச் சாடினார். 

கூட்டம் அதிகமாக இருப்பது குறித்துக் கரூர் போலீசார் தங்களை எச்சரித்திருக்கலாம் அல்லது தங்களைக் கேட்காமலேயே கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம் என்றும், அவ்வாறு செய்யாமல் நெடுஞ்சாலையிலிருந்து போலீசாரே தங்களை உள்ளே கூட்டிட்டு வந்து நாடகம் நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், கரூர் போலீசாரை முழுமையாக நம்பித் தான் நன்றி தெரிவித்ததாகவும், இப்படியொரு நாடகம் நடக்கும் என்று தனக்குத் தெரியாது என்றும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார்.

கனிமொழி எம்பி அளித்த பதிலடி:

முதலமைச்சர் விஜய்யின் இந்த உரை குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது தி.மு.க. எம்பி கனிமொழி அதற்குப் பதிலளித்தார். அவர் கூறுகையில், "எல்லோருக்குமே அவரவர்க்குரிய பொறுப்பு என்று ஒன்று இருக்கிறது; அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்துத் தற்போது விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. 

ஏனெனில், இந்த விவகாரம் தற்போது அதிகாரப்பூர்வ விசாரணையில் இருக்கக்கூடிய விஷயம் என்பதால், பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக அதுகுறித்து நான் பேசாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன். ஆனால், அந்த விபத்து நேரிட்ட நேரத்தில் கூட மக்களோடு நின்று உதவியவர்கள் யார், தவிக்கவிட்டு அங்கிருந்து சென்றவர்கள் யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஓ அப்படியாJul 10, 2026 - 03:31:39 PM | Posted IP 172.7*****

நீங்களே 2ஜி குற்றவாளி உலகிற்கே தெரியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory