» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில், இரத்த வங்கி சார்பில் உலக இரத்த கொடையாளர்கள் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் இரத்த மையங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட தன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில்: "பாதுகாப்பான மற்றும் போதுமான இரத்த தானத்தின் அவசியத்தைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் உலக இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
இரத்த தானம் என்பது உயிரைக் காக்கும் உயரிய மனிதநேயப் பணியாகும். ஒரு யூனிட் இரத்தம் மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றும் திறன் கொண்டது. விபத்துகள், அறுவை சிகிச்சைகள், பிரசவ கால அவசரநிலைகள், புற்றுநோய் மற்றும் இரத்த நோய்களுக்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தன்னார்வக் கொடையாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.
எனவே, இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து இரத்த தானம் செய்து உயிர்களைக் காக்கும் பணியில் பங்கேற்க வேண்டும்." என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தன்னார்வ இரத்த தானத்தின் அவசியம் குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். "இரத்த தானம் செய்வோம்... உயிர்களைக் காப்போம்", "உங்கள் இரத்தம் – ஒருவரின் புதிய வாழ்வு" ஆகிய விழிப்புணர்வு முழக்கங்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலசுப்பிரமணியம், இரத்த வங்கித் துறைத் தலைவர் மருத்துவர் ரவிசங்கர், மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், இரத்த வங்கி அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


