» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)
தென்காசி அருகே நர்சிங் கல்லூரி மாணவிக்குத் தொடர் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்த தனியார் மருத்துவக் கல்லூரித் தாளாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி பகுதியிலுள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்லூரியின் தாளாளர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட தென்காசி காவல்துறையினர், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் கல்லூரித் தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கல்லூரித் தாளாளரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரைத் தென்காசி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்குப் பிறகு, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் கூறியதையடுத்து, அவரை உடனடியாகக் காவல்துறையினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


