» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்திற்கு 300 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு: ஆட்சியர் ஸ்ரீதர் தகவல்!

செவ்வாய் 21, நவம்பர் 2023 5:54:54 PM (IST)

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குமரி மாவட்டத்திற்கு 300 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு ஜனவரி  7 மற்றும் 8, 2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.300 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து, நடைமுறைப்படுத்த அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள்,  கல்லூரி கூட்டமைப்பு, அனைத்து நிறுவனங்கள், அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து உறுதி செய்வதற்குரிய வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி ரூ.90 இலட்சத்திற்கு மேலான இயந்திர தளவாட மதிப்புள்ள தொழிற்சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப்பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கூட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள், வணிக செயல்பாட்டாளர்கள் றறற.அளஅநழடெiநெ.வn.பழஎ.in   என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

மாவட்ட தொழில் மையத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 குறித்து அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள மாவட்ட தொழில் மையம், தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில்-4  அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 04652-260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர்,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory