» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விலகிய மிக்ஜம் புயல்: கனமழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:11:11 AM (IST)

மிக்ஜம் புயலால் 2 நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே தொடா்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மாநகரப் பேருந்து ஓட்டுநா்கள் தங்கள் பணிகளுக்கும், பணி முடித்தவா்கள் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று (டிச.5) காலையில் இருந்து ஒரு சில பகுதிகளில் மட்டுமே மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மிக்ஜம் புயலால் பெய்த கனமழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது.
வெள்ளம் வடிந்த சாலைகளில் உடைந்த மரக்கிளைகள், இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியாா் மினி பஸ்களை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ஞாயிறு 11, மே 2025 11:51:14 AM (IST)

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
சனி 10, மே 2025 8:21:06 PM (IST)

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு தகவல்
சனி 10, மே 2025 5:51:33 PM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)
