» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:48:13 AM (IST)
சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; "சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள்,
சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF, இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி." என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியாா் மினி பஸ்களை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ஞாயிறு 11, மே 2025 11:51:14 AM (IST)

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
சனி 10, மே 2025 8:21:06 PM (IST)

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு தகவல்
சனி 10, மே 2025 5:51:33 PM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)
