» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: நெல்லை துணை ஆணையராக அனிதா நியமனம்!

சனி 27, ஜனவரி 2024 4:42:52 PM (IST)

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், நெல்லை துணை ஆணையராக அனிதா  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:

திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார்.

அதேநேரம், திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்படுகிறார்.

மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.

திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்படுகிறார்.

சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமிக்கப்படுகிறார்.

மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி நியமனம் செய்யப்படுகிறார்.

சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.

சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory