» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோவாளையில் அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
சனி 13, ஜூலை 2024 5:49:33 PM (IST)

தோவாளையில் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சானலில் தண்ணீர் திறந்து விட முடியாததால் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தோவாளை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன் புதூர் விக்னேஸ்வரா மஹால் அருகில் வைத்து மாவட்ட செயலாளரும், குமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் மாபெரும் கஞ்சி காய்ச்சும் போராட்டமானது நடைப்பெற்றது.
இதில் தோவாளை தெற்கு ஒன்றிய மாவட்ட கழக செயலாளர். முத்துக்குமார் முன்னிலை வைத்தார், மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)

குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:20:03 AM (IST)

வெள்ள அபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:36:20 PM (IST)

தூத்துக்குடியில் குளம் போல மாறிய அரசுப் பள்ளி : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:15:54 PM (IST)




