» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குலசை தசரா திருவிழா: நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா!
புதன் 9, அக்டோபர் 2024 8:30:48 AM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 5-ம் நாளான நேற்று நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா சென்று அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பிரசித்திபெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலில் மாலை அணிந்து, பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முத்தாரம்மன் கோவில் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு 8 வகையான கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு, யாகசாலை ஹோமம் பூஜையுடன் கும்ப கலசங்களில் இருந்து அம்மனுக்கு பால், மஞ்சள், விபூதி, தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து முத்தாரம்மன் அபிஷேக மண்டபத்தில் இருந்து நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:59:40 PM (IST)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு: ஏப். 23-ல் வாக்குப்பதிவு - மே 4ல் ரிசல்ட்..!
ஞாயிறு 15, மார்ச் 2026 6:16:47 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:35:31 AM (IST)

பெட்ரோல் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : டி.ஜி.பி.க்கு விற்பனையாளர்கள் சங்கம் கடிதம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:29:44 AM (IST)

பக்கத்து வீட்டில் 15 பவுன் நகை திருடிய வாலிபர் கைது : 24 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:13:08 AM (IST)

