» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரேஷன் கடைகளில் 2,000 காலிப் பணியிடங்கள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
புதன் 9, அக்டோபர் 2024 5:26:20 PM (IST)
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிப் பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2000
பணி: விற்பனையாளர்
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக நியமன நாளில் இருந்து ஓராண்டுக்கு மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு மாதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வழங்கப்படும்.
பணி: கட்டுநர்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக நியமன நாளில் இருந்து ஓராண்டுக்கு மாதம் ரூ.5,500 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு மாதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, சீர்மரபினர் மற்றும் இந்த வகுப்புகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில்லை. ஓசி பிரிவினர் 32-க்குள்ளும், இதே பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும், மாற்றுத் திறனாளிகள் 42-க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரரின் வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்பயிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப் பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு ரூ.150 மற்றும் கட்டுநர் பணிக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.drbcgl.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்ப்பிப்பதற்காக கடைசி நாள்: 7.11.2024
மக்கள் கருத்து
RameshOct 15, 2024 - 09:46:46 PM | Posted IP 162.1*****
இந்த அறிவிப்பு பணம் உள்ளவர்களுக்கு திறமை அடிப்படை இல்லை தமிழக அரசே ஏன் இந்த ஏமாற்று வேலை அப்பாவி இளைஞர்களை ஏமாற்றுகிறார்கள் ஒரு நபருக்கு 150 எத்தனை விண்ணப்பங்கள்
S.vijayalskshmiOct 15, 2024 - 08:20:42 AM | Posted IP 162.1*****
Working in job
KumarOct 14, 2024 - 05:32:46 PM | Posted IP 172.7*****
Good job
SakthiOct 14, 2024 - 05:31:27 PM | Posted IP 162.1*****
Important work
RJ vasuOct 11, 2024 - 01:13:02 PM | Posted IP 172.7*****
இந்த வேலையாவது எனக்கு கிடைக்கட்டும்
VasuOct 11, 2024 - 01:10:41 PM | Posted IP 172.7*****
At least let me get this job
SundarOct 11, 2024 - 07:57:29 AM | Posted IP 162.1*****
5 laksh
SundarOct 11, 2024 - 07:57:27 AM | Posted IP 172.7*****
5 laksh
நானும் ஒருவன்Oct 10, 2024 - 04:59:56 PM | Posted IP 172.7*****
இதுக்கு முன்னாடி அப்ளை பண்ண ரேஷன் கடை ஜாப் க்கே பதில் இல்ல. இத நம்பி அப்ளை பண்ண அவன் மண்டையில் தபேலா வாசிப்பீங்க
AbishekaOct 10, 2024 - 03:21:59 PM | Posted IP 172.7*****
Good
S. AnusuyaOct 10, 2024 - 02:40:55 PM | Posted IP 172.7*****
இந்த வேலை எனக்கு முக்கியம்
Dinaharan sOct 10, 2024 - 09:07:44 AM | Posted IP 162.1*****
இந்த வேலைக்காக நான் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன் மற்றும் இந்த வேலை எனக்கு முக்கியமானது என் லைஃபுக்கு இது போதுமானதாகும்
PrabaKaran kOct 15, 2024 - 10:39:35 PM | Posted IP 172.7*****