» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!
செவ்வாய் 15, அக்டோபர் 2024 4:14:08 PM (IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் நாளை (அக்.16) கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் மீனவர்கள் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.